பக்கம்:தமிழஞ்சலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி ஆத்மா, என்னைப்போல ஒர் உண்மைப் பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவர்கள், ஜம்புலனுக்கும் ஆறறிவுக்கும் நடுவில் இருக்கின்ற உயிரைப்போல் - உற்றார் உறவினர்கட்கு மத்தியில் இருக்கிறார்கள்! உடற்கூட்டைவிட்டு வெளியே வந்த உயிர், தங்க இடமில்லாமல் தவிப்பதுபோல் - நான் மலைகளுக்கு இடையில் ஆதரவற்றிருக்கிறேன். எனது சிந்தனையே! நீ எங்கு சென்றாலும் சரி: திரும்பி வருகிற நேரத்தில், கடைக்குச் சென்ற தாய், குழந்தைகட்குத் தின்பண்டம் வாங்கி வருவதைப்போல, இந்த உலக விடுதலைக்கு ஒர் உண்மையைக் கொண்டு வந்து கொடு! எனது படுக்கை, திடீரென்று மரணத்தால் சுருட்டப் பட்டுவிட்டால், என்னுடைய ஆசை, உறவுகளத் தனையும் - வெறுங்கையோடு தெருவில் நிற்கக்கூடாது. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்த்த அந்த வான் பறவையின் வரலாற்றை எனக்கும் அறிவித்துவிட வேண்டும். பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம், அந்த அரவம் தலையை நீட்டுவதைப்போல, எனதுள்ளம் திறக்கப்படும் போதெல்லாம் - என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன. 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/95&oldid=863687" இலிருந்து மீள்விக்கப்பட்டது