பக்கம்:தமிழஞ்சலி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி தூங்கு மூஞ்சி மரத்தின் இலைகள் அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தலையைத் தொங்க விட்டக் கொள்வதைப்போல: என்னுடைய அந்திமக் காலத்தில், உண்மையைக் கண்டுபிடிக்கும் எனது ஆர்வங்கள் தொங்கப் போட்டுக் கொள்ளக் கூடாது. நல்ல பகல் நேரத்தில், சவுக்குத் தோப்பில் கேட்கின்ற பேரிரைச்சல்போல - என்னுடைய இதயம், எப்போதும் இரைந்து கொண்டே இருக்கிறது. திருவிழா முடிந்த பிறகு, விழா முடிந்தப் பெருமையில் ஊர் திரும்பும் பக்தர்களின் முகத்திலே இருக்கின்ற அமைதி - அந்தப் பறவையின் வரலாற்றை அறிந்த பிறகுதான் எனக்கும் இருக்குமென்று நம்புகிறேன். இவ்வளவு பேராசை எனக்கு இருப்பதற்குக் காரணம் - நான் சிறு வயதிலேயே - தாயின் ஒரு மார்பகத்தில் பால் குடித்துக் கொண்டிருக்கின்றபோதே - மற்றொரு மார்பகத்தை - யாரும் சுவைத்துவிடக் கூடாதே என்று, எண்ணியப் பழக்கந்தான். இதை மனிதப் பேராசை என்று எண்ணிவிடாதே! குழந்தை ஒரு தெய்வம் இது தெய்வீக ஆசை!! நீண்ட நாட்களுக்குப் பிறகு, என் நெஞ்சே! உன்னோடு நான் உறவாடுகிறேன். மனசாட்சியையும் - உன்னையும், சூழ்நிலைச் சந்தையில் - சொற்ப விலைக்கு விற்று - நெடிய நாட்களாக, மேற்கூறிய இரண்டுமற்றவனாக இருந்து கொண்டி ருந்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/96&oldid=863689" இலிருந்து மீள்விக்கப்பட்டது