பக்கம்:தமிழஞ்சலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அறிவாளர் பனுவலாலும் - அறிந்தோர் மொழியாலும் - செறிந்தோர் அமைதியில் செழித்த அடக்கத்தாலும் - இழந்த இரண்டையும் நான் திரும்பப் பெற்றேன். கடலுக்கு அடியில் இருக்கின்ற மணல், எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதாக எந்த கந்தகப் பூமியும் ஒத்துக் கொள்வதில்லை. அதைப்போல, எனது இதயத்தின் அடித்தளத்தின் குட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசைகள் - குளிர்ச்சியோடில்லை. எண்ணமே! அதோ அந்தப் பறைவ வருவதாகத் தெரிகிறது! எனது கனவுகள் உருவம் பெற, அந்தப் பறவையிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வா! நிலவுக்கு அருகில் இப்போது அப்பறவை என் கண்களுக்குத் தெரிகிறது. அதன் வருகையால் அந்த நிலவு மேலும் குளிர்ந்து விட்டது! இல்லையெனில், கடல் பொங்குவதைப்போல் - பக்கத்திலே உள்ள நீர்வீழ்ச்சியின் தேக்கம், அலைகரம் நீட்டும்ா? திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவில், சந்தனத் தென்றல் நுழையும்போது - தொழுநோய்ப் பிடித்தவன் - தன்னுடைய வேதனையை மறந்து - அந்தத் தென்றலின் குளுமையையும் ரசிக்கிறான்! 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/97&oldid=863691" இலிருந்து மீள்விக்கப்பட்டது