பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


'எண்ணின்ன, எழுத்து மின்ன, எழுதுநூற் பொருளு மின்ன, மண்ணின்ன, மனித ரின்னர், மாண்பின்ன' தென்னப் பன்னும் கண்ணன்ன கண்ணன் றன்னைக் கணவனாய்க் கைப்பற் றும்நாள், 'பெண்ணின்ன' ளென்று பேசிப் பிரமித்து நிற்கு மாறே. ஒதலில் ஒர்ந்த உண்மை உள்ளமுட் கொண்ட தாயின், காதலன் கண்ண ஞயின், கடமையில் கருத்து மாயின், சாதலில் முடியும் வாழ்வு சாந்தியில் நிலைக்கு மாயின், ஈதலுக் குரிய நானும் ஏற்பதற் குரிய ளாவேன். 'தாகமே' எனவான் நோக்கித் தவிக்கின்ற தரணி எங்கும், ஏகமாய்க் குளிர்ந்து தண்ணிர் இதமாகப் பரவிப் பாய, மேகமா யிடித்து மின்னி மிகுமழை பொழிய என்ன லாகுமே லதுவே வாழ்வின் அரும்பய னுகு மன்ருே! பெண்ணுகி, ஆணு மாகிப் பிறந்துள்ள பிழைப்பில் லார்க்குக் கண்ணுகி அமைந்து கண்ணன், காதாகி அமைந்து நானும், புண்ணுகி யுள்ள புன்மைப் பூராவும் போக்கி, மக்கி மண்ணுக, மணக்கப் பூத்த மல்லிகை வாழ்வாக் கேமோ?