பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

20 இணையும் எண்ணங்கள்

107

ஞாயிற்றுக் கிழமை: கொஞ்சம்
நலமான நாளாய் வந்து
போயிற்று; குழந்தை குட்டி
புசித்துவிட் டயர்ந்து துாங்க
லாயிற்று; சீதா, ஆராய்ந்
தாறுத லுற்றாள்; அய்யன்
பாயுற்றான்; நீலா, வாழ்வைப்
பற்றியா ராய லுற்றாள்.


'பயிரிலே மறைந்தி ருக்கும்
பாங்கொடு பயிர்ச்சீ வன்கள்!
தயிரிலே மறைந்தி ருக்கும்
தனியுண வான வெண்ணெய்!
துயரிலே மறைந்தி ருக்கும்
துலங்கொளித் தொகுதி! தொட்டென்
உயிரிலே மறைந் திருப்பான்
உணர்வுரு வொளியாய்க் கண்ணன்!


குடலெலாம் குலுங்க அப்பா
குமுறட்டும்; கூடக் குந்தி
உடலெலாம் உலுங்கச் சீதா
ஒப்பாரி வைக்கட் டும்;நான்
கடலிலே கலக்கச் செல்லும்
காட்டாறு புரையும் சொத்தைத்
திடலாகித் தடுத்துத் தேக்கித்
தேசத்திற் குதவச் செய்வேன்.


நன்செய்நா னுாறு காணி;
நாற்பது காணித் தோப்பு,
புன்செய்மற் றுள்ள சொத்து
பூராவும் பொதுமை யாக்கி,
அஞ்சியே அடிமை யாய்இங்
கருந்திடக் கஞ்சி யின்றிப்
பஞ்சையா னோர்க்குப் பங்கிப்
பரவசப் படவைக் கின்றேன்!