பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


இன்னொரு சின்னச் செய்தி, -இனிப்பான செய்தி சீதா! "மன்னவன் பணியன் ருயின், நின்பணி மறுப்ப னே?என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்ருே?" என்னுமிப் பாட்டிற் கேற்ப இரண்டுரை செய்வே னின்று! ஆசி ரா. சா. சி. கூற, "ஆவி'யா சிரிய ராரார் தேசிக னெனது மேதைத் திறத்தினை வியந்து தீட்ட, மாசிலா மணிபொன் னுடைய மாண்புறப் போர்த்த,- யாவும் பேசியா யிற்று: சீதா! "பேப்பரி"ல் படிப்பாய் நீயும்! ... வாசிக்கும் வரியொவ் வொன்றும் வனிதையின் வருத்தம் போக்கக் கூசிக்கொள் வதற்கு யாதும் குறையில்லை இனிமேல்! கூடக் காசுக்கும் கவலை யில்லை கணவனுக் கெனவே சீதா, யோசிக்க லானுள், 'தெய்வம் உண்டுநம் பக்க' மென்றே.