பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

19 அய்யனரின் அஞ்சல் "என்னையே எதிர்பார்த் துக்கொண் டிருக்குமென் இன்ப மே! நான் சென்னையி லுள்ளேன்; எல்லாம் சேமந்தான்; தெரிவி சேமம்! அன்னைசீ தாகல் யாணம்; அகலிகை சாப நீக்கம் முன்னையெங் கும்கேட் காத முறையிலே பிரசங் கித்தேன். செயிரிலா நாற்றங் காலில் செந்நெல்லைத் தூவிச் செய்த பயிரலா தொப்பொன் றில்லாப் பச்சிளம் மக்கள்,-தாய் நீ! துயரிலா திருக்கத் தெய்வம் துணையுள தெனினும், நானிங் குயிரிலா திருத்தல் லொத்த, - ஒருகுறை யுளதுள் ளத்தே! 'செல்லவே வேண்டாம் நீரிச் சென்னையை இனிவிட்' டென்று சொல்லவே செய்கின் ருர்கள், சொல்லருஞ் செல்வர்; சும்மா மெல்லவோ, விழுங்க வோநான் மெத்தன மாக வுள்ளேன்: ஒல்லவே சீதை காதைக் கொருநாளும் ஒய்வே இல்லை! யுக்திதான் எனது சொத்தின் றுண்மையை உரைத்தால்; இங்கே முக்திமேல் முடிவில் லாத மோகங்கொண் டுள்ளார் மூண்ட பக்தகோ டிகள்; பண் பாட்டில் பரவசப் பட்டுத் தத்தம் சக்திக்கு மீறிச் செய்வர் சன்மான மெனக்குச் சீதா!