பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

104

தீதினைச் சிந்தை யாலும்
தீண்டுவ தறியாச் செம்மல்;
நூதன நூல்க ளாய்ந்த
நுண்ணறி வுடையோன்; நோற்கப்
போதனை புரியும் பொய்யாப்
புலவனை மணந்தால் நான், 'நம்
சாதிபோய்ச் சாகு ' மென்றால்
சகம்சாந்தி யெய்திற் றப்பா!

வான்பெறும் மதிபோ லன்றி
வளர்ந்திடும் மதிபெற் றானை,
கான்பெறும் நதிபோ லன்றிக்
கருணையாம் நதிபெற் றானை,
தேன்பெறும் பொதிபோ லன்றித்
தீந்தமிழ் பொதிபெற் றானை,
நான்பெறும் நிதிபோ லன்றி
நலந்தரும் நிதியாய்ப் பெற்றேன்.

மண்ணினி லாணுய் மற்றிம்
மறையவர் மரபில் தோன்றிக்
கண்ணனின் கமுகந் தோப்பைக்
கைப்பற்றிக் கொண்டீர்! உங்கள்
பெண்ணெனப் பிறந்த நான், அப்
பெருமையை இரட்டிப் பாக்கக்
கண்ணனை யேகைப் பற்றிக்
களிக்கின்றேன், அப்பா!" என்றே.

'எய்வதின் றென்கை யம்பை
எடுத்துநீ என்மீ தென்றால்,
தெய்வசங் கல்ப மென்றே
தெளிவது தவிர்த்து, வேறு
செய்வதற் கில்லை! செய்; உன்
சிந்தையொத் திருந்து, சீராய்
"உய்வதுன் பொறுப்பு! தெய்வம்
"உறுதுணை யாக!" என்றான் .