பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

103


நீராட்டித் துவட்டி யுன்னை
நேர்த்தியாய் மடியில் வைத்துச்
சீராட்டிப் பாலு மூட்டிச்
‘செல்வமே’ யெனத்தா லாட்டிப்
பாராட்டி வளர்த்தே னுன்தாய்
பரலோகம் போன தன்பின்!
வேராட்டி விடவேண் டாம்நீ
வேதனை விளைத்தற் கென்னை!

மாரைவிட் டானின் பிள்ளை
மருதப்பன்,- அவனை மற்’றிவ்
ஆரைவிட் டோட்டு வே'னென்
றுரைத்துவிட் டுன்னத் தானும்,
சீரைவிட் டுள்ளங் கெட்டுச்
செப்பாது சென்று விட்டான்.
நேரைவிட் டினிநீ சென்றால்,
நிலம்விட்டுச் செல்வேன் நானும்!

கூடாது குழந்தாய்! குன்றாக்
கோத்திரம் குற்றம் நேரக்
கூடாது குழந்தாய்! கொண்ட
குலத்தினுக் கிழிவு நேரக்
கூடாது குழந்தாய்! கூசக்
குடும்பத்தில் குலைவு நேரக்
கூடாது குழந்தாய்! ... என்னக்
கூடாதாள் கூறிக் கொண்டாள்:

“ஒத்தான உதவிக் கொட்டி
உமைநம்பி ஒழுகி னோர்தம்
சொத்தான தனைத்தும் கூட்டிச்
சுளையாக்கி விழுங்கு முங்கள்
சத்தான சதியால் கூடச்
சாகாத சமர்த்துச் சாதி;
அத்தானின் அழிம்பாட் டத்தில்
அழியாத அருமைச் சாதி!