பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102



‘விடிந்தபின் விளக்கம் விட்ட
வெண்மதி’ யெனநின் றாளை,
நடந்ததை அறியா அய்யன்
நாத்தடு மாறக் கேட்டான்:
“கடிந்ததார்? உனது கண்ணில்
கலக்கமேன்? சீதா! நெஞ்சம்
இடிந்திட நேர்ந்த தென்ன?
இயம்படி அம்மா!' என்றே.

“அடுக்கக்கூ டாத யாவும்
அடுத்ததின் றப்பா! நாளை
நடக்கக்கூ டாத யாவும்
நடந்திடக் கூடு' மென்றன்
றெடுக்கக்கூ டாது சேர்ந்த
இழிவழி விடையூ றின்ன,-
வடிக்கக்கூ டாத கண்ணீர்
வடிந்திட வடித்தாள் சீதா!

காலாலே நடக்கா தென்றும்
கையாலே நடந்த கர்ணம்,
ஆலாகிக் கிளைத்தான் மேலே!
அறுகாகித் துளைத்தான் கீழே!
“நீலாவுன் நினைவை மாற்றி
நெறியறிந் தொழுகி னன்றி
மேலான நமது சாதி
மேம்பாட்டிற் கழிவு நேரும்!

‘‘‘எனக்காக வாழ்ந்த நாட்கள்
எல்லாமும் இழிநா’ ளென்னத்
தனக்காக வாழ்ந்தி டாது,
தழைத்தது பூத்துக் காய்த்துக்
கனிக்காக வாழ்ந்தும், கண்டோர்
கல்லடிக் குற்ற மாப்போல்,
உனக்காக வாழ்ந்தொவ் வொன்றா
யோடிற்றென் வாழ்நாள் நீலா!