பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

101

முன்புறம், மாலா வீட்டு
முன்றிலில் நின்ற நீலா,
பின்புறம் பிரிந்த பின்னல்
பிரமீளா பிடித்தி ழுக்க,
அன்புறும் அக்கா ஈன்ற
தனைத்தையும் அழைத்துக் கொண்டு,
துன்புறும் தந்தை கண்முன்
தோன்றிட வந்தாள், தொய்ந்தே!


‘சின்னம்மா வந்தா’ ரென்றே
சேகரம் செய்த வற்றை,
மன்னும்மாத் தண்டல் முத்தன்
மகிழ்ந்துவைத் திடுமுன் அய்யன்,
பன்னும்மா றுரைக்குப் பாவம்
பலியாவ தோரா தன்று ,
‘‘என்னம்மா நீலா! வீடேன்
இருள்மூடிக் கிடக்கு?’’ தென்றான்.

‘‘தோட்டங்கள் தோறும் போய்ப்பொய்த்
தோத்திரம் செய்து தோதாய்
நாட்டுக்காய் கறிகள் வாங்கி
நலுங்காது கொண்டு வந்து
போட்டுக்கொண் டிருக்கின் றீர்; நீர்
போயுள்ளே அமர்ந்து மெல்ல
வீட்டையே கேட்டா லெல்லாம்
விளம்பிடும் அப்பா!’’ என்ருள்.


‘ஏச்சுற்றுத் தனது கோட்டை
இடிந்தின்று வீழ்ந்த’ தென்று
மூச்சற்றுக் கிடந்த சீதா,
முனகிக்கொண் டெழுந்து, முன்னால்
பேச்சுற்றுக் கேட்ட வாறே
பேதுறு மாறு வந்தும்,
நாச்செற்றுப் போக யாதும்
நவில்வதோ ராது நின்றாள்.