பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100

 18 கர்ணம் கருகி வரல் மூக்கினைக் கவர முல்லை முகைமலர்ந் திடவும், மூசி யாக்கையைக் கவரத் தென்றல் அசைந்தடுத் திடவும், வெய்யோன் நோக்கினைக் கவர வானம் நோற்றுமெய் சிவக்கக் கர்ணம் நாக்கினைக் கவரக் காய்கள் நதிதாண்டி நடந்து வந்தான். சொத்தையோ சுளுகோ சூழாச் சுவைமிகுந் துள்ள நல்ல கத்தரிப் பிஞ்சு கொஞ்சம்; கறிவேப்பி லைக்கட் டொன்று: சத்துள்ள முருங்கை யோடு சாம்பல்பூ சுனியுஞ் சேர்த்து, முத்தனே சுமந்து கொண்டு மூகனும் வந்தான், முன்னல்! காலத்தை வீண்பண் ணுது கருத்தினைப் பணியில் வைத்துச் சீலத்தைப் பேணும் செல்வி சீதாவைக் காணும்; வாசல் கோலத்தைக் காணுேம்; பேரக் குழந்தைகள் கூடக் காணுேம்; நீலத்தைக் காணுேம்; சுந்தன் நிலைப்படி யருகில் காணும்! வாசலில் வந்து நின்ற வசங்கெட்ட கர்ணம் வாயால், 'தேசிகா!' என்று தேன் போல் தீங்குரல் தெளித்தான்; திரக் 'கோசலா!' என்று கூட்டிக் கொட்டின் குரலை! கூடப் பேசுவா ரின்றி நின்று பெருமூச்சு விட்டான் பின்பு!