பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

99

"சொல்லக்கேள் சீதா! சும்மா,
சுயபுத்தி யின்றிச் சொல்லால்
கொல்லப்பார்க் காதே என்னை!
கொல்லையி லிருப்பான் சுந்தன்;
மெல்லப்போய் நீயே மெய்பொய்
மிகைகுறை யின்றிக் கேட்டு,
நல்லது பொல்ல தோர்ந்து
நடந்துகொள்’’ என்றாள், நல்லாள்!

"என்தப்பும் உனது தப்பும்
இதிலினித் தெரியு' மென்றச்
சந்திப்புக் கெழவே சீதா,
"சரசர வென்றப் போதச்
சுந்தப்பன் வந்து நிற்கச்
சுருக்கெனக் கடிந்து சொன்னாள்:
'சிந்தப்பா வரதப் பன்றன்
செடிபற்றிச் செய்தி யென்றே.

'ஆவலோ டய்யர், அன்றங்
கடியேனுக் காணை யிட்டார்:
ஏவலன் மறுத்தற் கேலா
தென்னநா னிதயத் தெண்ணிக்
கோவிலின் தெய்வத் திற்கோர்
கும்பிடும் போட்டுக் கூனித்
தாவினேன் அனும னாகித்
தக்காளி தொலைந்த தென்றான்.

மடலெலாம் வாழை யாகி,
மருங்கெலாம் கரும்பாய் மல்கித்
திடலெலாம் தென்னை யாகித்
திகழ்கின்ற திருவூர்க் குள்ளே,
உடலெலாம் உருகிக் குன்ற
உளமுடைந் தொழுக, ஊத்தைக்
குடலெலாம் தெறிக்கக் குந்திக்
குமுறினாள் குலைந்து சீதா!