பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

வெறுப்புடன் விரவி வெட்கம்
வேத்னை வெளியில் பீறப்
பொறுப்புடன் புகன்ருள் நீலா:
பொய்ப்புகழ் புதுக்க வேண்டாம்!
பிறப்புடன் கலக்கப் பெற்ற
பிராமணத் தந்தி ரங்கள்
இறப்புடன் போரா டிக்கொண்
 டிருக்கின்ற தறிநீ! யென்றே.

"தந்திரம் தவித்து நாசம்
தானுகி விடட்டும்! தாங்கும்
மந்திரம் கூடச் சேர்ந்து
மடியட்டும்! மனிதர் மாறி,
எந்திர மாகட் டும்! நாம்
என்றென்று மிருந்து வாழத்
தொந்தர வில்லை! துய்க்கத்
தோப்புண்டு, துரவுண் டென்ருள்.

'துரவுண்டு, தோப்பு முண்டு:
துண்ையாகச் சுந்த னுண்டு;
வரவுண்டு; செடிகள் வைத்த
வரதப்பன் தோட்ட முண்டங்
கிரவுண்டு: பிடுங்கி வீசி
எவர்மீதோ பழியைப் போடும்
கரவுண்டு; கண்டால் சிந்தக்
கண்ணிருண் டுனக்கிங்" கென்ருள்.

"நாசமாய்ப் போக! உன்பொய்
நாவறுந் திடுக! நம்மை
ஏசும்மே ஊர கூடி’
என்பதை எண்ணு தின்று
 பாசமே அறுத்தாய் . கெட்டுப்
பாழாகிப் போமா றந்தோ!
தேசமே! தெய்வ மே!கண்
தெரியாதோ உங்கட்" கென்ருள்.