பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


<poem>

“ படிக்கின்ற பகவத் கீதைப்

படிப்பினைப் படிநீ யென்னை அடிக்கின்றாய் போலும் சீதா! ஆயினும் பரவா இல்லை! நடக்கின்ற திரும ணத்தில் நயந்துநீ எனக்கு நாளை, கொடுக்கின்ற பரிசா யேற்றுக் கொள்கின்றே னிதனை ” யென்றாள் *

செந்தமிழ் சிறக்கக் கற்றுச் செய்வன திருந்தச் செய்யும் சொந்தத்தன் தங்கை சுட்டிச் சுருக்கெனக் கூர்ந்து சொன்ன இந்தச்சொல்,- எழில்த மிழ்ச்சொல்- இதயத்தி லெறிவே லாகி, வெந்தபுண் ணில்தைத் தென்ன வேதனை யுற்றாள் சீதா!

“ என்னாலே என்றும் திங்கொன் றேற்படா துனக்குச் சீதா! உன்னாலே எனக்கும் தீங்கொன் றுண்டாகா தெனினும், கன்னம் முன்னாலே மூடிக் கொண்டு முடிவாகச் சொல்வேன்: அத்தரன் தன்னாலே தளிர்க்கும் தீமை தனில்பாதி உனக்குண் ” டென்றே.

“ தீமையாம் அத்தா னாம்!நீ

தெரிவிப்ப தென்ன டீ!இச் சீமையே அமர்ந்து கேட்கும் சீராமன் கதையைச் செப்பின்! ஊமையும் கூடக் கேட்டால் உபதேசம் புரிவோ னாவான்! ஆமையே! முயலி னாற்றால் அறியாய்நீ அடியே!” என்றாள்.