பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

11 G நீலாவென் றெண்ணு மிந்த நிலையான நினைவென் நெஞ்சில்! நீலாவென் றியம்பு மிந்த நெட்டெழுத் திரண்டென் நெஞ்சில்! நீலாவென் றழைக்கு மிந்த நிதியான பெயரென் நெஞ்சில்! நீலாவென் றியங்கு மிந்த நிகரிலா உருவென் நெஞ்சில்! உடையிலே உடலை வைத்தாள்; உலகபின் பற்றத் தக்க நடையிலே நலனை வைத்தாள்; நகில்களைச் சுமந்தி ளைத்த இடையிலே எழிலை வைத்தாள்: இமைத்திடுங் குவளை யீர்ங்கண் கடையிலே கருனை வைத்தாள்; காதலை வைத்தா ளென்மேல்! மேலான நூல்கட் கெல்லாம் மேலாக மேன்மை மேவி, 'நீலா!ஓ நீலா! நீயென் நெஞ்சிலே நிலைத்து நின்றாய்! மாலாக வேநீ என்னை மாற்றினுய்! மனக்கா மற்ருன் ஏலாதிங் கினியென் னுலென் றெண்ணமிட் டிருந்தான் கண்ணன்.