பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.போதும் பொன்வண்டும்



குருதியோர் பந்தாய் வானில்
கோலங்கொண் டெழுந்த’ தென்னப்
பருதியு மெழுந்தான்; கண்ணன்
படுக்கைவிட் டெழுந்தான்; பாளை
கருதிய தடையக் கண்முன்
கதவினைத் திறந்து கொண்டு ,
‘வருதுயர் தவிர்க்க வந்த
வானமிழ் தெனவே, வந்தாள்.


“கிஞ்சித்தும் கேண்மை யில்லாக்
கிளி! உன்னை இரவி லென்றன்
நெஞ்சத்துள் வைத்த வாறே
நெட்டுயிர்ப் பெறிந்து கொண்டு,
மஞ்சத்தில் மடிந்தி ருந்தேன்
மலர்ந்தகண் மாற்றா மல்!நீ
வஞ்சித்து விட்டெவ் வாறாய்
வந்தனை வெளியே” என்றான்.


இருவரா யிருந்தும் காதல்
இதயங்க ளிரண்டு மொன்றி
ஒருவரா யிருந்தாற் போலன்
றுணர்ந்துபே ருவகை யுற்றுப்
“பிரிவிலா திருந்து வாழப்
பெறுமொரு திருநாள், பேண
வருவதா யறிந்தேன்; வந்தேன்;
வழிதிறந் திருந்த” தென்றாள்.

“அத்தானும் கதிரோ னென்ன
அகம்விட்டு மறைய, அன்றே
முத்தான தமக்கை யின்வாய்
முளரிபோல் மூடிக் கொள்ள,
பித்தான அப்பா செய்த
பிழை,பிணிப் பறுக்க உங்கள்
சொத்தாக முடிந்த” தென்றே
சுவைசொட்டச் சொன்னாள், நீலா!

-