பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

 "என்சொல்லி மகிழ்வேன் நானென் இதயத்தி னெழில்வி ளக்கே! வன்சொல்லில் லாம லாய்ந்து வருங்காலம் வகைப்ப டுத்தி, இன்சொல்லில் தேனும் பாலாய் என்செவி குளிரப் பெய்த உன்சொல்லுக் கொப்பச் சொல்ல உளத்தினி லொருசொல் காணேன்! நிற்கண்ட ஞான்றே நெஞ்சில் நிலைகொண்டா யெனினும், நீல விற்கெண்டை புருவம் கண்ணுய் வெண்முல்லை பல்லாய், வெள்ளைக் கற்கண்டைக் கைப்பிக் குஞ்செங் கனியிதழ் சிந்து மிந்தச் சொற்கண்ட இன்றே காதல் சொர்க்கத்தின் சுவையைக் கண்டேன். நதியுண்டிவ் வூரில், முல்லை நறுமண முண்டு; நல்ல மதியுண்டு; மாலைப் போழ்தில் மந்தமா ருதமு முண்டு! சதியுண்டு வீட்டில்! காதல் சமத்துவ மதுவுண் டாயின், நிதியுண்டு கொல்லோ வேறு நினைவுண்டு பண்ணற்" கென்ருன் வளர்ந்ததன் அன்பைக் கண்ணன் வார்த்தையாய் வடிக்கக் கேட்டாள்; மிளிர்ந்தன கண்கள்! நெஞ்சில் மின்னல்வெட் டிற்று; மேனி குளிர்ந்தது; முறுவல், வெட்கம் கொஞ்சம்பொய்க் கோபம் கூடித் "தளர்ந்ததென் இதயம்! தாங்கேன், தவிர்கஇத் துதிக" ளென்றுள்.