பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



பதிப்புரை

நிலைபேறுடையதாக....... !
நுட்பமான தர்க்கங்களாக ........ !
ஆழமான சிந்தனைகளாக.........!
தொய்வின்றி,
மரபுப் பசுவின் மடியிலிருந்து சுரந்த பால் ..... .

சர்க்கரைப் பந்தலில் தேன் மாரியாக...
கற்போரின் இதயத்தைக் கவ்விப்
பரவசமூட்டும் அற்புதக் கருத்துக்களாக.....
கம்பீரமான சொல்லாட்சியுடன்.........
வாழ்வின், வரலாற்றுண்மைகளின் உயிர்த்துடிப்பான
எண்ணங்கள்---

கலையழகு கொஞ்சக் கவிஞர் வடித்துள்ள பாத்திரங்கள்...
நம் சிந்தையை விட்டகலாத சிரஞ்சீவி ச்சித்திரங்கள்.....!

தேன் இனிப்பானது ஆனால் இக்காவியமே தெவிட்டாததாக......

வானைத் தழுவும் வெண்ணிலவின் சோதி வெள்ளம் போல் ஒளிர்கிறது.

தமிழனின் தலையாய பண்பை,


  தஞ்சமென் றொருவன் தாளில்
  தாழாதான், தாழ்ந்தோர் தம்மை
  வஞ்சமென் றெதுவும் செய்து
  வருத்தாதான், வஞ்ச கர்பால்
  பஞ்சமென் றிரந்து கஞ்சி
  பருகாதான், பகுத்தா ராய்ந்த
  நெஞ்சமென் னும்சான் றொன்றை
  நீக்காதான் தமிழ’ னென்பர்....'


என்ற கவிதையில் தான் என்ன கம்பீரம்......!
        கற்பனைக்கும் பஞ்சமில்லை.....

வேனில் காலத்தின் மனத்தை மயக்கும் தென்றல் மருத்துவி,