பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

________________

‘ குன்றினி லுதித்துக் கோலக்
         குவளையில் கண்ணு றங்கி
         ஒன்றுநந் நிலவி லூர்ந்தாங்
         கொண்தளிர் மேல்த வழ்ந்து
         முன்றிலில் கமழப் பூத்த
         முல்லைப்பா லார்ந்த தென்றல்
         மன்றினி லுலவக் கண்டு
         மனமெலாம் மயங்கும் வேனில்.........
       தமிழ் நலிவிற்கு ஒரு...... +
       சமுதாயத் தேய்விற்கு ஒரு...... -
       நாடு நாசமானதற்கு ஒரு...... X
           இக்குறிகள் அற்புதமான பாடலாக......
        'அமுதாய தமிழின் தேய்வு
        ஆரியம் கூட்ட லாலே
        சமுதாயத் தேய்வு சார்ந்த
        சமத்துவம் கழித்த லாலே
        நமதாய நாட்டின் தேய்வு
        நச்சு நூல் பெருக்க லாலே......'
    நம் தாய்த்திரு நாட்டைப் படம் பிடித்துக் காட்டும் நிகரற்ற ' புறநானூறை'ப் ' பள்ளியில் பிள்ளைகட்குப் பாடமாய்க் கூட வைக்கார்'.......! என்று மனம் வருந்தும் கவிஞர்,
      * தரமான வாழ்வு காணத்
        தனையர்க்குத் தமிழ்த்தாய் தந்த
        வருமானம்; வணங்கி வாழார் வரலாறு',
என்று பாடிப் புறநானூறுக்குப் புகழாரம் சூட்டுகிறார்.
     காலத்தை வென்று நிற்கும் வரலாற்றுக் கருவூலமான இந்நூலின் பாடல்களனைத்தும் பண்பாட்டின் வெளிப்பாடுகள். ஆம்! சிறுமைகளைப் பிளந்தெறிந்து பெருமைகளைப் பேணும் பேரிலக்கியமாக மலர்ந்துள்ளது.
    தமிழ்ப் பெருங்குடி மக்களின் தலையாய கலாசாரக் காப்பக மான இந்நூல்.........! தமிழறிந்த பெருமக்கள் ஒவ்வொருவரது கரத்திலும் தவழட்டும்......
                                             பதிப்பகத்தார்