பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



தொன்மைத் தோற்றம்

“அடலருந் துப்பின் கெடலரும் படப்பை:
குரவே, தளவே, குருந்தே, முல்லையென்
றிந்நான் கல்லது பூவு மில்லை;
சிறுகொடிக் கொள்ளே, பொறிகின ரவரையே,
கருங்கால் வரகே யிருங்கதிர்த் தினையே
யிந்நான் கல்ல துணாவு மில்லை:
பாணன், பறையன், கடம்பன், துடியனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
யொளிரேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது,
நெல்லுகுத்துப் பரவும் கடவுளு மிலவே.

-இதுதான் தொன்மைத் தமிழ்நாடு

-'செற்றாரை வழிதபுத்தனன்
நட்டாரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தார்க்கு மறுப்பறியலன்'

-இவன்தான் தன்மானத் தமிழன்

"தமர்தற் றப்பின் அதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தானா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தின னாதலும்
வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்’-,
அகிம்சை,சகோதரத்துவம்,சுதந்திரம்,சமத்துவம்
எனும் உலகு தழுவிய இந்நான்கு கொள்கைகள் உள்ளிட்ட

-இதுவே தமிழன் கொண்ட கோட்பாடு

-அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால், பிறரெனக் கோல்கோ டாது
நமரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத்தன்ன வண்மையும் மூன்றும்
உடையை யாகி இல்லோர் கையற,
ஆம்! நாட்டில் ஏழையென ஒருவ னில்லாது
வாழ்வாங்கு வாழ ஆள்வதே தன்மானத் தமிழனது
பண்டைய அரசியல்நெறி!

- புறநானூறு புகட்டுவ திவை
. ஆக்கியோன்