பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


"புள்ளாயி ரம்சூழ்ந் துள்ள பொழிலெ'னப் பொலியும் பண்ணை! எள்ளாயி ரம்,நெல் மூட்டை எண்ணுயி ரத்திற் கேற்பத் தொள்ளாயி ரம்கா னிைக்குத் தோப்பொடு நன்செய் புன்செய், உள்ளாயி ரங்குற் றங்கள் உள்ளோனுக் குடைமை யூர்க்குள்! தெருவினைத் திருத்தம் செய்வோன் தின்பதற் குணவே யில்லே! எருவினை யெடுத்துச் செல்வோன் இடுப்பினில் துணியே யில்லை! ஒருவினை யுணர்ந்து செய்யா துண்டுடுத் துறங்கு வோற்குத் திருவினை யளித்த தெய்வம் தேசத்து ரோகி யன்ரறே? சொல்லையே சொல்லித் தந்தோம்: சுவையாகச் சமைத்துத் தின்ன, நெல்லையே நிறைத்துத் தந்தோம்; நீடித்து நிலைத்து வாழ்தற் கில்லையே இருக்கத் தந்தோம்; இவர் நமக் களித்த தேத்தும் கல்லையே! அதுவும் நம்கைக் காசினைக் கவர்வ தற்கே! 'கொடுத்ததைக் கொள்ளான் கோசன், 'கொள்ளை'யென் றுலகங் கூற எடுத்ததை விடவும் மாட்டான்' எனும்பழ மொழியுண் டய்யன் படித்ததை விட, நான் பாரில் படித்தநூல் அதிகம்! பாங்காய்ப் பிடித்திதைச் சாதிக் காமல் பின்வாங்க மாட்டே' னென்ருன்.