பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

75


அறங்கூறும் வாயா னாலும்,
அங்கையைத் திறந்து காட்டார்!
மறங்கூறும் விழியர் னாலும்,
மறந்தும்தம் தலையை நீட்டார்!
திறங்கூறும் நெஞ்சா னாலும்,
திருத்தமாய்ச் செய்ய மாட்டார்!
குறங்கூறும் கூற கூட்டக்
குணமிது குன்றா” தென்றே.

“அத்தானும், அம்மா னுந்தான்,-
ஆனநாள் அந்நாள்! இந்நாள்
சொத்தான நாளாய்ச் சொக்கும்
சுயநலம் மிக்குச் சும்மா,
பத்தான பின்,முன் பார்த்துப்
பதினென்றாய்ப் பரிவ தன்றி,
ஒத்தான தெல்லாம் செய்ய
உளமொப்பா தென்றான், குப்பன்.

“வரவுக்கொத் துறவாய் வந்து
வளருமாம் வட்டிக் காசு!
மருவுக்கொத் துறவாய் மாறி
மணக்குமாம் மருக்கொ ழுந்து!
தரவுகொத் துறவாய்த் தாங்கத்
தாழிசை வருமாம்! தாளாய்க்
குருவுக்கொத் துறவாய் வந்தான்,
குப்பனு’’ மென்றான், அப்பன்.

“தறியோட்டி நெய்த சுப்பன்,
தமிழூட்டி நெய்வோ னானான்;
கொறியோட்டி, மேய்த்த குப்பன்,
குணமூட்டி மேய்ப்போ னானான்;
நெறியூட்டி நிற்க நெஞ்சில்
நீதியிவ் வூரில் நிற்க,
வெறியூட்டி விட்ட கண்ணன்
விடிவெள்ளி” யென்றான், செங்கன்.