பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன்

1 ஊரும் குடிகளும்

அதுவொரு சிறிய ஊர்தான்;
ஆயினும், அருமை யான
நதியொரு புறத்தில்; நல்ல
நடுத்தரப் பள்ளி யொன்று
விதியுற விளங்கும் வீதி,
வீடுகள்! வெளியில் வேறு
நிதியுறும் வாழை, தென்னை,
நெல்,கரும் பள்ளும் நெஞ்சை!


சீரெலாம் சிறக்கச் சேர்ந்த
செழிப்பான சிறிய அந்த
ஊரெலாம் உயர்த்திப் பேச
உற்றவை ஒருநான் கைந்து
நேரிலாக் குடிகள்! நீங்க
நின்றவை, நீரும், நீள
வேரிலாப் பயிரும் போன்று
வெறுமையால் வீணா னோரே!