பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8



திருவூரில் திளைத்து வாழும்
திருவாளர் திறனைத் தேரின்,
"தெருவோரம்" பூத்துக் காய்த்துத்
திகழ்ந்திடும் தேமா' வென்று
மருவாரும் மருவி வாழும்
மருதப்ப னொருவன்; மற்றும்
வருவாரை வழுத்தி வாழும்
வரதப்ப னொருவன் மட்டும்!

இருப்பவர்க் குள்ளே இங்கிவ்
விருவரும் ஏற்ற மன்றிக்
கரப்பிலா தளித்துக் காக்கும்
கலையிலோ, கணித்துக் கண்டு
பரப்பிடும் அறிவா ராய்ச்சிப்
பண்பிலோ, பாரில் மக்கள்
நிரப்பிலா நிலைக்குள் ளாக்கும்
நெறியிலோ நிறைந்தா ரன்றே.


மரமொன்று வாகை, மற்ற
மா, பலா மரங்க ளுக்காம்
உரமின்றி, உள்ள தெல்லாம்
உறிஞ்சிக்கொண் டுயர்வ தொப்பப்
பரிவின்றிப் பண்பா டின்றிப்
பகைமூட்டிப் பணிக்க னாய்த்தான்
கரவொன்றக் காசு சேர்த்த
கனமய்ய னொருவ னுண்டே!

கணக்கனும் அவனே, ஊர்க்குள்
கனவானும் அவனே யானான்,
பிணக்குகள் பெருக்க லொன்றே
பேரருள் செயலாய்ப் பெற்றான்!
'இணக்கமென் னும்சொல் லூரில்
இருந்ததே இல்லை' யென்ன
நுணுக்கமா 'யிவனே ஊர்க்கோர்
நோயெ'ன நுவலு மாறே.