பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



9

"யாரைவிட் டாலும், ஊரில்
அகம்பாவி யான இந்த
மாரைவிட் டானின் பையன்
மருதனை மட்டம் தட்டி
ஊரைவிட் டோட்டா விட்டால்,
ஊணின்றி உறக்க மின்றிச்
சீரைவிட் டிறப்பேன் நானும்
சிந்தைநொந் தெ" ன்றான் சீமான்.

"சரி,தப்பெ'ன் றெதையும் செப்பிச்
சாராது, சரியோ தப்போ,
ஒருதுப்பு மில்லா தூரில்
ஒதுங்கியே வாழ்ந்த தப்பு
மருதப்பன் செய்தத் தப்பு!
மாபெரும் இந்தத் தப்பு
எரிதப்பி விழும்வைத் தூறாய்
எரித்ததிச் சீமான் நெஞ்சை!

"மூர்த்தியோ சிறிய தேனும்,
முறையாக முழக்கின் மூளும்
கீர்த்தியோ பெரிய" தென்னக்
கேட்டமாப் பிள்ளை 'கிட்டப்
பார்த்துவா' வென்றால், பாய்ந்து
பறித்து வந்திடுவோன்,"மாமா!
நேர்த்திதான்;இதனை நானே
நிறைவேற்றி வைப்பே"னென்றான்

மல்லிகை கமழ்ந்தால்,அங்கே
மதிப்போர்யார் மருக்கொ ழுந்தை?
'நல்லவ னிருந்தால் இல்லை
நமக்கிங்கு பெருமை' யென்றே
வல்லவன் அவனை வாட்டி
வதைப்பதூர் வழக்காய்க் கர்ணம்,
'கல்லவன் அசையான்; காத்துக்
கண்டிதைச் செய்நீ' யென்றான்.