பக்கம்:தமிழன் இதயம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்ப்பண்ணை

தமிழன் இதயம் தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும். அறிவின் கடலைக் கடைந்தவனாம் அமிர்தம் திருக்குறள் அடைந்தவனாம் பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான். கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான் புவியில் இன்பம் பகர்ந்தவெலாம் புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான். பத்தினி சாபம் பலித்துவிடும்' பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதி காரமதை செய்தவன் துறவுடை ஓரரசன். சிந்தா மணி, மண மேகலையும் பத்துப் பாட்டெனும் சேகரமும் நந்தா விளக்கெனத் தமிழ் நாட்டின் நாகரி கத்தினை மிகக்காட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/10&oldid=1448502" இலிருந்து மீள்விக்கப்பட்டது