இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
- தமிழன் இதயம் : காடி வணக்கம்
கொடி வணக்கமது செய்வோம்- நாட்டின் குறைகள் நீங்கியினி உய்வோம் முடி வணங்கியதைப் போற்றி-அதன் மூன்று நிறக்குறிகள் சாற்றி. (கொடி) புதுமையான கொடி பாரீர்-வேறு பூதலத்திலிலை தேரீர் முதுமையா யெவர்க்கும் பொதுவாம்-வாழ்வின் முறையைக் காட்டுவது இதுவாம். (கொடி) பச்சையான ஒரு தோற்றம் - நமக்குப் பக்தி வேண்டுமெனச் சாற்றும் இச்சையான பொருள் கூடப்- பக்தி இருக்க வேணுமதை நாட. (கொடி) துய்ய வெள்ளை நிறக் காட்சி- உண்மை துலங்கு மென்பதற்குச் சாட்சி மையமாக நிற்கும் மர்மம் -சத்யம் மதங்கள் யாவினுக்கும் தர்மம். (கொடி) துறவின் வர்ண மந்தக் காவி-உலகின் துக்கப் பூட்டினுக்குச் சாவி சிறையும் வீடுமதற் கொன்றே- என்னும் சேதி ஓதுவதற் கென்றே . (கொடி) 130