உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

.

தமிழன் இதயம்


சேதியைத் தெரிந்து அன்னார்
திகைத்துனைத் தடுத்ததாலே
தெரியாமல் இரவிற் சென்று
தினந்தினம் அதையே செய்து
ஆதியின் அருளைத் தேடும்
அந்தணர்க் கரசே! ஐயா!
ஆணவம் அழிந்தா லன்றி
ஆண்டவன் அணுகான் என்றாய்
தீதுகள் உலகில் நீங்கித்
திக்கெலாம் ஒளிரும் ஞான
தீபமே ராம கிருஷ்ண
தேவனே போற்றி போற்றி.

'இரும்பினாற் சதையும் நல்ல -
எஃகினால் நரம்பும் கொண்ட
இந்திய இளைஞர் தோன்றி
உழைத்திட வேண்டும்' என்று
விரும்பினோன் மதன ரூப
விவேக ஆனந்த ஞானி
வேடிக்கை யாக வந்து
'கடவுளைக் காட்டும்' என்ன,
அரும்பினாய் முருவல் அங்கே
அதன் பொருள் அறிவார் யாரே!
அன்றேஉன் அடிமையாகி
அதுமுதல் உன்னை விட்டுத்
திரும்பிடான் விட்டில் போலத்
திளைத்தவன் விழுந்த ஞான
தீபமே ராம கிருஷ்ண
தேவனே போற்றி போற்றி.

.

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/26&oldid=1448832" இலிருந்து மீள்விக்கப்பட்டது