இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் நால்வர் தேவாரமும் ஒளவை நன் மொழிகளும் ஆழ்வா ராதியர் அனுபவ உரைகளும் பால்வரும் திருப்புகழ் ஆதிய பனுவலும் மேல் வரும் கதிக்கென விளம்பிய திதுவே. (தரு) யாகங்கள் முயன்றதும் யோகங்கள் பயின்றதும் மோகங்களை விடுத்த முனிவரர் பற்பலர் சாகங்களைப் புசித்துத் தவங்கிடந் துழன்றதும் ஆகமம் பற்பலவும் அலைந்ததும் இதற்கே. (தரு)