உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் : ஜவஹர்லால் நேரு மன்னுயிரைப் போர்க்களத்தில் கொன்று வீழ்த்தி மலைமலையாய்ப் பிணக்குவியல் குவித்ததாலே மன்னரெனப் பலர்வணங்கத் தருக்கி வாழ்ந்தோர் மாநிலத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம் தன்னுயிரை மன்னுயிர்க்கே தத்தம் செய்து தருமநெறி தவறாத தன்மைக் காக இன்னுயிர்கள் மனங்குளிர்ந்து இளங்கோ என்று எதிர்கொள்ளும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. பணம்படைத்த சிலபேர்கள் தனியே கூடிப் பட்டாளம் சுற்றி நின்று பாரா செய்ய மணம்படைத்தாம் வரவளிக்க மகிழ்ந்து போகும் மன்னரென்பார் எத்தனை யோ பேர்கள் உண்டு குணம்படைத்துக் கருணைமிகும் கொள்கைக் காகக் கோடானு கோடிமக்கள் எங்கும் கூடி 'கணம் பொறுங்கள் கண்டாலும் போதும்' என்று களிசிறக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. எச்சிலுண்ணும் சிறுமனத்தார் பலபேர் கூடி இல்லாத பெருமைகளை இசைத்துக் கூறும் இச்சகத்தால் மதிமயங்கி இறுமாப் புற்ற இருள் மனத்தார் எத்தனையோ அரசர் கண்டோம் 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/45&oldid=1449896" இலிருந்து மீள்விக்கப்பட்டது