பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சி.என். அண்ணாதுரை பழைய பல்லவி தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல் தேவை என்று கருதுபவர், அண்ணாமலை நகர மாநாட்டார் முயற்சியை எதிர்க்கார். ஆரியர் எதிர்க்காமலிரார்; ஆரியர் எதிர்ப்புப் பற்றி நாம் அஞ்சத் தேவையுமில்லை. தமிழர் தமிழ் இசையை வளர்க்கத் தீர்மானித்து விட்டனர் என்ற செய்தியைத் தமிழர் பொதுக்கூட்டங்கள் கூட்டித் தெரிவித்து விட்டனர். தமிழகம் இந்த முயற்சியில் முழுமனதுடன் ஆதரவு தருகிறது என்பது தெரிந்துவிட்டால் ஆரியர் சுருண்டு விடுவர் என்பது திண்ணம். ஆரியத்தைக் காப்பாற்ற அவர் தம் ஆட்சியிலே போலீசும், ராணுவமும். பொக்கிஷமும் பிறவுங் கொண்டும் முயன்றே தோற்ற ஆரியர்கள், விழித்த தமிழன் வெஞ்சினத்துடன் வீறு கொண்டெழுந்தால் என்ன செய்ய இயலும்? தனித் தமிழ் கேட்டால், மொழி வளம் குன்றும் என்பர்; தமிழ் இசை கேட்டால், சங்கீதக் கலை க்ஷுணமடையும் என்று கூறுவர்; தமிழர் அதிகாரம் வேண்டும் என்று கேட்டால், ஆட்சியிலே திறமை குறையும் என்று கூறுவர்; தமிழருக்குச் சம உரிமை வேண்டும் என்று கேட்டால், பழங்காலப் பக்குவம் பாழாகுமே என்று பகருவர். தமிழனுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டால் பாரத மாதா பிரலாபிப்பாளே என்று பரப்புவர்: இது அவர்களின் ஆரியர்களின் பழைய பல்லவி! இது இனி பலிக்காது. எங்கே அந்தக் கலை? சேரனுடைய கொலு மண்டபத்திலே. கொண்டாட்டங்களின் போது இசைவாணர்கள் "வாதாபி கண' பாடவில்லை. சோழன் களிக்க 'சுனோ சுனோ" பாடவில்லை.. பாண்டியன் பரிபாலனத்தின்போது, பலுகவே எமீனா" என்று பாடவில்லை.