பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள் உண்ணுதல் நன் விருப்பில் அமையலாம். ஆயின் உடுத்தல் பிறர் விருப்பிற்கு ஏற்ப அமையவேண்டும்' என்பது உடைபற்றி, மாந்தரீன் பொதுவானநொரு எண்ணமாகும். விரைந்து செயல் படும் நட்புக்கு, உடுக்கை இழந்தவன் கைபினை உவமையாக்கும் நிலையில் வள்ளுவர், மானவுணர்வுக்குரிய உடையின் முக்கியத் துவத்தைப் புலப்படுத்துவார். பல்வேறு குழல்களால் பல பிரியினர்களாகப் பிரித்துள்ள மாத்தர் சமுதாயம், உடையிலும் தங்களின் பல்வேறு நிலைகளுக்கிணங்க மாறுபட்டு இருப்பது பண்டு தொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு கூறாகும். இவர்களின் வேறுபட்ட மன உணர்வுகள் உடையுடுத்தும் நிலை யிதும் பிரதிபலிக்கக் காணலாம். நீலகிரி வாழ் தோதவர்கள் கழுத்திலிருந்து கணுக்கால்வரை ஆடையைப் போர்த்திக் கொள்கின்றனர். அந்தமான் ஒங்கோன் மக்கள் இடுப்பில் ஒரு தார்ப்பட்டையை மட்டும் கட்டிக் கொண்டு பிறந்த மேனியாகத் திரீகின்றனர்." இவண் இடமாற்றத்தில் உடை மாற்றம் அமைகிறது. உடல் முழுவதையும் மறைத்தல் தேவை என ஒரு பாலார் கருத, மற்று ஒரு சாரார் அதனைத் 1.Eat according to your owa taste but dress according to others." - Select Fapers, Sanit Kumar Chatterji, page-133, 2. தமிழியல், தொருதி-1, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ.மீராமுகைதின், பக்கம்-94.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/102&oldid=1498898" இலிருந்து மீள்விக்கப்பட்டது