பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தமிழர் ஆடைகள் துகிலினை மேலாடையாகவும் அணிந்தனர் என்பது 'புடை வீழ் அந்துகில் இடவயின் தழீஇ" (நெடு. 181) என்னும் பாடல் அடியால் பெறப்படும். இடவயின் தழீடு என்பதனின்றும் வீழும் துகிலினை இடப்பக்கமாகத் தாங்கினான் என்பதனால் மேலாடையை இன்று போன்றே அன்றும் இடத்தோளில், அணித்துள்ளனர் என்பது வெளிப்படுகின்றது. பிற அறிஞர்களின் எண்ணங்களும் இக்கருத்துக்கு அரணாகின்றன.. கம்பன் பாடல்கள் பல, உத்தரியம் அணிந்தமையினைப் புலப்படுத்தவல்லன. அடுத்த நீர் ஒழித்தன அருவி தூங்கின எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்திதின்று உடுத்த வால் நிறத் துகில் ஒழித்த போன்றவே (4359) என்ற உவமை உத்தரியம் மார்பில் அணியும் தன்மையைப் புலப் படுத்தி நிற்கின்றது. இங்குத் தோ.லின் ஒரு பக்கத்தின் வழியாக விழும் உத்தரியம் என்னுமாற்றான், ஒருவழியாகப் போடப்பட்ட தன்மை தெளிவுறுகின்றதே தவிர எத்தப் பக்கம் என்பது விளக்கமுறவில்லை. உதயணனின் மேலாடை பற்றிக் கூறும்போது கொங்கு வேளிர், யாம்பு ரியன்ன மீக் கொடானை இருபுடை மருங்கினும் வருவளிக் கொசித்து (1.42:244-45) என்பார். இவன் மீக்கொள்தானையாகிய மேலாடை, காற்றில் இருபக்கத்திலும் அசையும் வண்ணம் தோற்றம் தரக் காண் கின்றோம். இலண் இருபுடை என்பது மார்பின் இருபுறங் களிலுமா அன்றி முன்பக்கம் பின்பக்கம் என்ற நிலையிலா என்பது தெளிவுறவில்லை. 4. The Patra statue however shows that the upper part of the body is bare except for the uttariya which lies across the chest and comes down to the feet from behind the left sboulder. -Indian Costume Coiffure and Ornament, Sachidanand Sahay, Page-4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/107&oldid=1498918" இலிருந்து மீள்விக்கப்பட்டது