பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழர் ஆடைகள் படும் கொடுத்திரை ஆடையினை உடுத்தும் முறை பற்றிய விளக்கம் தெளிவுறவில்லை, சிந்தாமணியில், வட்டு அணிந்த போர்வீரனை (2263) காணலாம். இவண் வட்டு என்பது வட்டுடை என்ற பொருளில் அமைந்து அரசர்களின் போர்க்கோலத்தினை, வீரரும் கொண்ட காட்சியினைக் காட்டும். சூளாமணி 'கலிங்கத்தைத் தரண் மேற் திரைத்துடுத்து, என இயம்பும் தன்மை, வட்டுடை போன்றதொரு நிலையில், கலிங்கத்தையும், தாளின் மேற் அமையும்படி அடுக்கியுடுத்துக் காணப்பட்டனர் என்ற எண்ணத்தைத் தரும். நுண்வினைக் கச்சை தயக்கறக் கட்டி (குறிஞ்சி, 125) என்ற எண்ணம் கச்சையைக் கட்டிய முறையைச் சுட்டவல்லது. கவசம் என்று நோக்கும்போது கவசத்தை முழுமெய்யும் மறையும்படியாகவும் சில பாகங்களுக்கு என்று தனித்தும் அணித்துள்ளனர். 'மெப்புரு கவசம்" (லெப். 14:169) மெய்பீனை மறைக்கும் இதன் நிலையினையும், 'தோளின் மீளாக் கவசமிட்டு" (கம்ப. ஆரணிய. 421) தோளில் கவசம் அணிந்தமையினையும் 'காலாசொடு அறாறித்து' (சீவக. 2236) காற்கவசத்தையும் சுட் டும் தன்மையால் தெளிவாக்கமாம். விரல்களுக்கும் கவசம் அணி தலைக் கம்பன், அழகியதொரு உவமை மூலம் விளக்குகின்றான். புதையீருட் பொழுதிறும் மவரும் பொங்கு ஒலி இதைவு அருநாள் அளர்ச் சிவந்த தாமரை இதழ்தொறும் வண்டு வீற்றிருந்தது ஆம்ான ததைவுறு நிரைவிரல் புட்டில் தாங்கினான் (7256) இராமனது போர்க்கோலம் இது. தாமரையின் இகழ்கள் தொறும் வண்டு வீற்றிருந்தது என்று சொல்லுமாறு நெருங்கு யுள்ள வரிசையான கைவிரல்களில் விரற் செறியை அணிந்தான் என்னும் இவ்விளக்கம் மிகச்சிறப்பாக விரற்கவசம் பற்றிய எண்ணத்தைத் தருகின்றது. புட்டில், கோதை முதலிய விரல், கைக்கவசங்களை விற் போரில் பயன்படுத்தியமையினைக் காண இவை விற்போருக்கு என எழுத்தவையாக இருக்குமோ என்ற எண்ணம் இங்கு எழு நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/109&oldid=1498926" இலிருந்து மீள்விக்கப்பட்டது