பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள் காவலர் 97 மெய்க்காப்பாளர், வாயிற் காவலர், துறைகாக்கும் காவலர் எனப் பல்நிலைகளில் காவலர் அமைகின்றனர். இவர்களில் மெய்க்காப்பாளர்களின் ஆடை கஞ்சுகமாக அமைத்து கஞ்கமாக்கள் எனும் அளவிலேயே தங்கள் தொழிலையும் புலப்படுத்துகின்றது. வாயிற் காவலரின் சட்டையினை, 'வெங்கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச் செங்கண் தீவிழியா' (431) எனச் சிந்தா மணி காட்டும். துறைகாக்கும் காவலர் வரிக்குப்பாயத்து வார் பொற்கச்சை யராகக் காட்சிதருகின்றனர் (பெருங். 1.40:378). இங்குச் சட்டை அணிதல் அனைத்துக் காவலரின் பொது உடையாக அமையக் காணலாம். துகின்முடி அணிந்தும் இக் காவவர் காணப்பட்டனர் என்பதை 'துகின் முடிப் போர்த்த நூங்கல் ஓங்கு நடைப்பெரு மூதாளர்' (முல்லை. 5), 'பைத்துகின் முடி அணித்து அவர்பின் உலவு கஞ்சுகியவர்போல' (சிந்தாமணி 1558) எனும் குறிப்புகள் உணர்த்துகின்றன. சட்டை பற்றிய குறிப்பு அமையும் பகுதிகள் அனைத்தும், புகு, புக்கு என்ற வினைகளையே சொல்லிச் செல்கின்றன." துகிற் குப்பாயம் புருகென' எனவும் படம்புக்கு (பெருங். 69) எனவும் இவை அமைகின்றன. புக்கு, புக என்ற சொற்கள் உடுத்தும் விதம் பற்றித் தரும் குறிப்பினைக் கம்பன் தெளிவாக உணர்த்து கின்றான். மின்னுடை வ்ேத்திரக் கையர் மெய்புகத் துன்வீடு கஞ்சுகத் துகிலர் (ஆரணிய.569) இவண், மெப்புகும் படியாகத் தைக்கப்பட்ட கஞ்சுகமாகிய ஆடை என்ற பொருளில் சட்டையணிந்த முறையை இயம்பக் காண்கின்றோம். இச்செய்திகளினின்றும், சட்டையினை இன்று போன்று அணியவில்லை; இன்று ஆடவர் அணியும் பனியன் போன்று அணித்திருக்கக் கூடும் என்ற விளக்கத்தைப் பெறலாம். 'போத் தாவின் வரலாறும்' இவண் இணைத்து நோக்கற்பாலது', 5 பொத்தான்கள் நமக்குரியனவல்ல. பொத்தான் என்னும் சொல் பட்டன் என்னும் சொல்லின் திரிபு. இன்றுபோல் இணைப்பு நோக்கம் அன்று. அலங்காரத்துக்காகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/110&oldid=1498928" இலிருந்து மீள்விக்கப்பட்டது