பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆடைகள் இலங்கையில் அரக்கன், அரக்கியரை உத்தரீயம் அணிந்த தன்மையில் கம்பன் காட்டுகின்றான். உயர்ந்த மாந்தரையே கம்பன் உத்தரீயம் அணிந்த நிலையில் காட்டிச் செல்வதும், இலங்கை வளம் மிக்க நாடாகக் காட்சியளிப்பதும், உயர்நிலை மாந்தர் அனைவரும் உத்தரீயம் அணிந்திருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தருகின்றது. 100 இக்குறிப்புகள் உயர்நிலை மாந்தரின் உடுத்தும் நிலை பற்றிய ஒரு சில தெளிவுகளையும் தருவன. செக்கரன்ன வெந்து நுணங்குருவிற் கண்பொரு புகூமொண் பூங் கலிங்கம் புரளும் தானை (மதுரை, 431-33.) பெருநிதிக் கிழாரின் இவ்வுடையின் தன்மைக்கு, 'செக்கர் வானம் போன்று சிவந்த நுண்ணிய வடிவாலே காண்பார் கண்களை வெறியோடச் செய்து சிந்திவிழுமாறு போன்று ஒள்ளிய பூத்தொழில்களையுடைய ஆடைகளைப் பொன்னிட்ட உ.எட வாளோடே பொலிவுறக் கட்டி நின்னிய தேர்த்தட்டின் கட்பிரம்பிடத்தே ஆடையின் முன்றானைப் புரனா நிற்ப' என்ற உரையாசிரியரின் உரை விளக்கம் கலிங்கமாகிய 'ஆடையுடன், மேலாடை அணிந்தமையினையும் தெளிவாக்க வல்லது. பொதுவாகக் காவலர் போன்றோரே சட்டை அணியக் கண்டோம். இவண் சிலம்பு, பொற்கொல்லனை மெய்ப்பை அணிந்தவனாகச் சுட்டுவது புதுமையாக அமைகிறது. ஆயின் இந் நிலை புலப்படுமாறில்லை. தொழிலாளரின் பெருங்கதையின் கணக்கர், திணைத் உடுத்தும் நிலையினை, புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி நிலந் தோய்புடுத்த தெடு நுண்ணாடையர் (1.32:63-4) எவக் காஸ்இன்றோம். இவன் போர்வை புறங்கால்வரை தாழ்ந்து காணப்படும் நிலையும், ஆடை நிலந்தோயும் அளவிற்கு கூடுத்திய நிலையும் அமைகின்றது. அரசர்கள் நிலத்தோயும் அளவிற்கு உடுத்தியதற்குப் பெருமிதம் காரணம் கண்டோம். எனவே அரசர்க்குரிய இத்தனித்தன்மை பின்னர் அனைவராலும் பின்பற்தப் பட்டிருக்கலாம் எனத் தோன்று எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/113&oldid=1498946" இலிருந்து மீள்விக்கப்பட்டது