பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்- தாழ்நிலை மாந்தர் உயர்த்த மாத்தர் நிலை இவ்வாறு அமையத் தாழ்நிலை மாந்தர் பற்றிய குறிப்புகளும் ஒருசில தென்படுகின்றன. சங்க இலக்கியத்தில் குறவரின் உடையாக மரனாருடுக்கை அமைய,சிந்தாமணி வேட்டுவன் உடையாக இதனை இயம்பும். வேடனாரிய குகனின் உடையினைச் சொல்லப்போத்த கம்பன், காழமிட்ட குறங்கினன் கங்கையின் ஆழமிட்ட தெடுமையினான் அரை தாழவிட்ட செத்தோவன் தயங்குறச் குழவிட்ட தொரு புலி வாலினான் 101 (650) என அவனின் உடையாகக் காழம், தோல், புலியின் வால் என மூன்றையும் சுட்டுகின்றான். இம்மூன்றையும் இடையில் அணிந்த நிலைதான் இவன் தெளிவுறுகின்றதே தவிர, பிற உடுத்திய நிலை தெளிவுபடவில்லை. முதலில் குறங்கினில் காழம் அணித்து அதல்மேல் தோலாடையினை அரைவரை தாழும்படி பொருத்தி இரண்டினையும் வெம்புலியின் வாளால் குழ இணைத்திருக்கவும் கூடும். மற்றொரு பாடலில் குகனை, வெற்றி வேற்சேனை யோடும் வெறி பொறிப் புலியின் வெவ்வால் சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன் (10505) என்று சுட்டும் தன்மை, புலியின் வெவ்வாலை மட்டும் தனித்து கடுத்திய தன்மையைக் காட்டுகின்றது, 'அர்சம் தரும் பூள்ளிகளையுடைய புலியின் கொடிய வாலைச் சுற்றத் தொடுத்துக் கட்டிய அரையுடையவன்' என்னும் இதன் பொருள், பல புலியின் வால்களை அழகுபடத் தொடுத்து இடையைச் சுற்றியும் கட்டிய தன்மையை விளக்கி நிற்கும். கம்பன், குனின் உடையில் புலியின் வாலுக்கு மிகுந்த சிறப்பளிக்கும் தன்மை அவன் வேட்டுவத் தொழிலின் மேன்மை. யினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்திருப்பதாகக் கொள்வதில் தவறில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/114&oldid=1498948" இலிருந்து மீள்விக்கப்பட்டது