பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 9 3. சிற்பம் சித்திரம் போன்று காட்சிச் சான்றாகப் பயன் படாது இலக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே. ஆயின், காட்சிச் சான்று மட்டுமே ஆடை வரவாறு முழுமையும் உணர்த்த வல்லதாகாது. வரலாறு எனின் அது எவ்வாறு அரச வாழ்க்கை மட்டும் அல்லவோ, மக்கலின் வாழ்க்கை நிலைகள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்பவேண்டுமோ சாதாரண அதைப் போன்று ஆடை வரலாறு என்பதும் .இடையுடுத்தும் முறையை விளக்குவது மட்டுமன்று, ஆடையுடன் தொடர் புடைய மாந்தர் வாழ்வியற் கூறுகள் ஒவ்வொன்றையும் அது வீனக்கவேண்டும். எனவே உடுத்தும் முறை ஓரளவே வெளிப்படி னும் பிற ஆடை வரலாற்றுக்குத் தேவையான விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இலக்கியம் மிக முக்கியமானது என்பது மறுக்கமுடியாத நிலை. இவக்கீய ஆய்வு இயம்பும் உண்மையும் கூட தமிழர் ஆடைகளைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் சிறப்பினை மேலும் கட்டலாம். 7-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தான் சிற்பம் சித்திரங்களைக் காண இயலும் நிலையில் அதற்கு முன்னைய, தமிழர் வாழ்வியற் கூறுகளில் தெளிவுபெற இலக்கியங்களே உறுதுணையாக அமையின்றன எனும் உண்மை யில், இது தனிச் சிறப்பு பொருந்தியுள்ளமை வெள்ளிடைமலை. ஆடை வரலாறு ஆடைவரலாற்றின் முதல் சான்றாக நாம் காண்பது நியாண்டர்தால் மனிதனைப் பற்றிய எண்ணம் என்பர். இதனை "மனித இனவரலாற்றில் சான்றுகளோடு கூடிய மிகப் பழமை யான மனிதர் நியாண்டர்தால் மனிதர்களே, ஒரோ-மக்னான் காலத்தில் பிரான்னில் காவிலாள் என்ற குசையில் கிடைத்த ஓர் எலும்புக் கூட்டின் அருகில் ஒரு கொண்டைஊகி, சிறு கச்சை களுடன் கூடிய வாசி போன்றவை கிடைத்தன,"1" என்னும் எண்ணத்தால் உணரலாம். இ.மு. 2003 ஆண்டிலேயே எடுப்திய விவசாயிகள் சணல் இழைகளைத் தயாரித்தனர். கிறித்துவுக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னரே சணல் ஆவடகள் எகிப்தில் மவித் திருந்தன. கம்பலி அடையும் காணக் கிடைந்தது. இதே காலப் பகுதியில் ஐரோப்பாவின் ஏரிப்பகுதி மக்கள் ஆட்டின் மயிரை 18. தமிழியுல், தொகுதி-5, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக். 90,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/22&oldid=1498782" இலிருந்து மீள்விக்கப்பட்டது