பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 முன்னுரை பிரிவினருக்கு நாகரிசமாகத் தோன்றாது. எவவே நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் உடுத்தும் முறையும், உடையின் தோற்றமும் மாறுபட்டு அமைகின்றன. இஸ்லாமியப் பெண்கள் தங்கள் முகத்தை மூடிக் கொல்வதை இன்றளவும் தாகரிகமெனக் கொண்டுள்ளனர். ஆடை அணியும் போது தங்கள் கால்களை மறைக்கின்றனர் சைனப் பெண்கள் மேல் நாட்டார் கால்கள் தெரிய உடை அணிகின்றனர். தென்னிந்தியப் பெண்கள் புடவையால் தம்மூடம்பை, பெரும்பாலும் முழுவமயாக மறைந்துக் கொள்கின்றனர். இன்றளவும் தம் மார்பை மறைக்காமை வேறுபாடாகத் தெரியவில்லை, சில மலையாள மகலிசக்கு. எனவே அ. மீரான்முகைதீன் குறிப்பிடுவது போன்று நாகரிகம், நாகரிகமின்மை என்பவை எல்லாம் அவரவர் சமுதாய மனவளர்ச்சியைப் பொறுத்ததே எனல் ஒப்புக் கொள்ளக் கூடிய எண்ணமேயாகும். இந்நிலையில் தமிழகத்தில் வாழ்ந்தோர் அன்று கூடுத்திய உடைகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு உடுத்தினர் என்பதனை, இலக்கியங்கள் உணர்த்தும் நிலையில் விளக்கமாக இவண் காணலாம். முன்றாம் இயல் பழக்க வழக்கங்கள் -நம் பிக்கைகள்-மீவியல்புக் கூறுகள் இப்பகுதியில் தமிழர், ஆடையுடன் தொடர்புடையதாகக் கையாண்டு வந்த பழக்க வழக்கங்கள், இன்னும் அவற்றுள் ஒருசிய தம்மிடம் காணப்படும் தன்மை, சிலவற்றை எச்சக் கூறு களாக மட்டுமே காணக்கூடிய நிலை ஆகியவை பேசப்படுகின்றன. நம்பிக்கைகள் என்னும் பகுதியில், பலவித மனவுணர்வுகள் அடிப்படையில் அவர்களிடம் காணப்பட்ட நம்பிக்கைகளைக் காணலாம். மீனியஸ்புக் கூறுகளும் உடையும் என்ற பகுதியில், வேறுபட்ட தெய்வத்திற்கென, இவர்கள் சாத்திய உடைகள், இவை தெளிவு 'படுத்தும் தமிழன் பல எண்ணங்கள், புராணக் கநைகள், போன்றவை ஆராயப்படுகின்றன. இயக்கன், அரக்கன், பூதம் போன்ற பிற மீவியன்புக் கூறுகளின் உடைகள் பற்றிய எண்ணங்களும் இவன் இயம்பப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/28&oldid=1498807" இலிருந்து மீள்விக்கப்பட்டது