பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் சா. கிருட்டினமூர்த்தி இயக்குதம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, செல்வன-500 11:3. அணிந்துரை "மனிதளின் அடிப்படைத் தேவைகளுள் ஆடை இந்தியாமாதது "ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்பது முதுமொழி மனிதனுடைய அப்படைத் தேவையாகவும் பண்பாட்டுச் சின்னமாகவும் விளங்குவது ஆடை ஆடையைக் குறிப்பதற்கு இலக்கியங்களில் பல சொற்கள் ஆளப்பட்டுள்ளன. உடுக்கை. துணிட ஆடை உடுப்பு குப்பாயம், மெய்ப்பாடி பட்டுடை, கமிங்கம், புடவை, சச்சு, தானை, படாம் என ஆடைகளைக் குறிக்கும் பல்வேறு சொற்கள் நிலவிவந்துள்ளதைக் காணும்போது இத்தகு பண்பாடுடைய சமுதாயாகத் தமிழ்ச் சமுதாயம் இருந்தது என்பதை நாம் அறியலாம். உடுக்கை இழந்தவன் கைபோல என்று ஆடையின் இன்றியமையாமை மான உணர்வோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. பண்டைத் தமிழர்களின் தொழில்களில் ஆடை நெய்தல் தொழில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. தெசவு இன்றியமையாத தொழிலாகப் பண்டைத் தமிழர்க்கு இருந்தது. பஞ்சு எடுத்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், சாயம் தோய்த்தல், ஆடை தைந்தல் போன்ற பல்வேது தொழில்கள் நடைபெந்ததாக இலக்கியங்களில் கானா முடிகின்றது. பஞ்சு எடுத்தல். நூல் நூற்றல் போன்ற பணிகளைக் கணவனை இழந்த பெண்கள் பேற்கொண்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. அவர்கள் பருத்திப் பெண்டிர், ஆளில் பெண்டிர் என்று வழங்கப்பட்டனர். மிக நுட்பமான ஆடை வகையையும் முன்னோர் நெய்ததற்கான சான்றுகன் திரம்பக் காணப்படுகின்றன. நூல் ஆடையோடு பட்டு ஆடை நெய்வதிலும் விளைநுட்பஞ் சான்றவர்களாகப் பண்டைத் தமிழர்கள் இருந்தனர். திலப்பட்டு, பூம்பட்டு, வெண்பட்டு, வண்ணப்பட்டு, ரோயப்பட்டு என்றெல்லாம் பட்டின் வகைகளைப் பற்றிப் பல்வேறு இலக்கியங்களில் பேசப்படுகின்றன. நூற்ற இழையின் இழையைக் காணமுடியாத அளவிற்கு மிக நுட்பமான ஆடைகளையம் முன்னோர்கள் நெய்நனர் என்பதற்குச் சான்றுகள் திரம்ப உள்ளன. 'இழைபருங்கு அறியா துழைநூல் கலிங்கம்' என்று மகையடுகடாம் ஆடையின் சிறப்பை பெளிப்படுத்திக் காட்டுகின்றது. ஆடை நெய்தல் என்ற செய்தியைக் கொண்டு நெய்வதற்குத் தறிகன் இருந்தன என்று கருத இடம் உண்டு. ஆனால் 1885இல்தான் பிரிட்டனைச் சார்ந்த இ காஸ்ட்லாட் என்பவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/4&oldid=1498674" இலிருந்து மீள்விக்கப்பட்டது