பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 45 தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, கோடா போன்ற பல மொயி களிலும் பயிலப்படும் தன்மை பகரும். தூமடி (அகம்.13), திருமலரள்ள புதுமடி (புறம்-390), பூத்து இல் இருமடி (பெரும். 1, 42: 145), மங்கல வனப்பினதோர் கோடி மடி (சூளா.1073) போன்ற இலக்கியப் பயிற்சிகள் மடியின் சிறப் பீனை யுணர்த்தவல்லது. தூய்மையானதொரு ஆடையினைச் குறித்ததைத் தெரிவிக்கவல்லது. மேலும், குறியவும் நெடியவும் மடிதரூக விரித்து என்ற எண்ணமும் (தெடு.135) அரசன் கொடுக்க அதனையுடுத்தும் புலவன் நிலையும் (புறம்.393) வெண்டுகிலிணைமடியினை விரித்துடுத்தும் தன்மையும் (பெருங் 2:5:131), துணியைக் குறிக்கும் பொதுச்சொல்லாகும் இது என்பதை உறுதிப்படுத்தவல்லன. அடியார்க்கு நல்லார் உரைக் ரும் கவற்றுமடி இதனைக் குறிக்குமொரு வழக்காயிருக்கலாம். இன்றும் மடி என்ற சொல் கோடித் துணியை அதாவது பதினாறு முழ வேட்டியை (இரண்டு இரட்டை வேட்டி அல்லது நான்கு மூழ வேட்டி இணைத்தது. துப்பட்டி என்றும் இதனைக் கூறுவார்கள் குறிக்க வழங்குகின்றது (கன்னியாகுமரி மாவட்டம்). ஆயின் பண்டைய இலக்கியச் சான்றுகளை நோக்க இத்தகைய அளவு இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் குறி யவும் தெடியவும் என்று கூறுவது (மது. 520) அளவற்ற தன்மை யையே காட்டுகிறது. தூய்மை, சிறப்பு கருதி, அன்று மடித்து வைத்த புதிய ஆடையினைத் தூமடி என்று உரைத்த தன்மை மரபாக வழங்கி வந்துள்ள நிலையில், 'டிடி' என்ற சொல்லே புத்தாடையையும், 29.Ta. mati - Ceremonial purity, as of one who has bathed, cloth made of the fbre of trees, Coarse silk cotton, etc., as ceremonially pure. Kn. Magi - cleanness, purity; a washed, clean cloth; mudi vala......... Kod. Madi-ritual purity; madi oatte clean clothes, Tu. madi-a newly washed cloth, bleached cloth, a garment of bark, silk or wool worn by brahmins and other high caste peoples during meals or any ceremony.......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/58&oldid=1498619" இலிருந்து மீள்விக்கப்பட்டது