பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 தமிழர் துடைகள் தூய்மையையும் குறிக்க வழங்குதல் ஆடையின் சிறப்பினையும், இன்றுவரை பொருள் மாற்றமிலாது வழங்கும் தன்மையையும் தெளிவுபடுத்தும். ஈரப் புடவையைத் தொடாது, உரைவைத்து, பூசைக்கு உடுத்தும் தன்மையில் அதனை மடிப்புடவை என்று அந்தணர் குறிப்பிடுவது இன்றும் நாம் காணக்கூடியது. பட்டு, கம்பளி இரண்டும் எப்போதுமே மடி என்ற எண்ணமும் அவர்களிடம் உள்ளது. 12. பட்டு உடைக்குரிய இழைகள் அனைத்தினும் உறுதியும் பள பளப்பும் மிகவுடையது பட்டு. பட்டின் பசுமையே பட்டு என்னும் சொல் ஆக்கத்திற்குக் காரணமாகலாம். உலண்டு என்றும் பட்டு நூலினைப் பெருங்கதை வியம்பும் (1:42:211). மேலும் 'அறிவு புறம் போய உலண்டதுபோல' (56-28) என்னும் கல்லாடம் பாடலடிக்கு உரையாசிரியர், அறிவில்லாதது என்றறியப்படும் அவ்வுலண்டு புழுப்போல, உலண்டு-ஒரு வகைப் புழு;கோற்புழு: இப்புழு தன் எச்சிலாலேயே தன் உடம்பைச் சுற்றி, கூடு அமைத்துக்கொண்டு வெளிப்படுதற்கு வாயில் இல்வாயல் அக்கூட்டினுள்ளேயே இறந்துபடும் என்பது என்று உரை அமைக்கின்றார், பெருங்கதை ஆசிரியர்கூறும் உலண்டுடன் இவ்வுலண்டு பற்றிய எண்ணத்தையும் நோக்க இவ்விரண்டும் ஒன்றா இல்லையா என்ற கருந்து மேலும் ஆய்வுக்குரிய ஒன்றா கவே அமைகின்றது. இருவிதப் பட்டுப் புழுக்கனினின்றும் உருவாக்கப்படும் பட்டு இழைகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாகத் தன் மதிப்பில் உயரிந்து வருவது கண்கூடு. தமிழ் இலக்கி யத்திலும் இப்பட்டினைப் பற்றிய பல எண்ணங்கள் அமை கின்றன. Te. madi, madugu purity, state of being unpolluted cloth; a pure or unpoliated cloth;........ - A Dravidian Etymological Dictionary, No. 3204. 30. "There are two general variclies of silk worm-the cultivated and the wild*-Fundamentals of Dress, Marictta Kettuned, Page-145.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/59&oldid=1498621" இலிருந்து மீள்விக்கப்பட்டது