பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 47 சங்க இலக்கியம் கொட்டைக் கரைய பட்டினையும் (பொது. 155) சிலப்பதிகாரம், அரத்தப்பட்டினையும் (20:14) பெருங்கதை, பிணர்முரிப்பட்டு (1:40:226) நிலப்பட்டினையும் (4:12:262) சித்தா மணி, அரத்தப்பட்டு (173) பால்பரந்தன்ன பட்டு (541) பூம்பட்டு (923) பச்சிலைப்பட்டு (2090) வெண்பட்டு (2358) வண்ணப்பட்டு (2694) போன்றவற்றையும் பகர்கின்றன. கம்பராமாயணம் மிக்க யட்டு வகை என்றியம்பும் (10365). அடியார்க்கு நல்லார் துகில் வகையுள் உரைக்கும் பச்சிலை (சிலப். 14:108) பச்சிலைப் பட்டினைக் குறிக்கும் வழக்காகயிருக்கலாம். குருதியும் குகுதிப் பட்டினைக் குறித்தமைந்திருக்கலாம். முக்கூடற்பள்ளு, செம்போன் இடைக்கிடைப் பெற்றீடும் பட்டு (6) பஞ்சவணப்பட்டு (8) பற்றிய எண்ணங்களைத் தரு கின்றது. பஞ்சவணப்பட்டு, சரிகை போட்ட பட்டுகளை இன்றும் நாம் காண்கின்றோம். பட்டு காவந்தோறும் வளர்த்த வளர்ச்சி நிலையை இப்பாக்கள் வழி உணரமுடிகின்றது. இப்பட்டு பற்றிய செய்திகளை நோக்க, இவை தனிப்பெயர் பெற்றதாகத் தெரியவில்லை (குருதி, பச்சிலை பற்றிய எண்ணம் வெளீப்படையாக இல்லை). வடமொழியில் கோசிகம், நேத்திரம் போன்ற பட்டுகள் தனிப்பெயன்குடன் திகழ்வன. தமிழ் இலக்கி யத்திலும் தனிப்பெயருடன் திகழ்வன இவையே. கல்வெட்டு ஒன்று ‘புவியூரிப்பட்டு" என உரைப்பினும், ஈண்டும் தனிப்- பெயர் அமையாதது குறிப்பிடத் தக்கது. பட்டுப் புழுக்கலினின்றும் பட்டு எடுத்தல் தவிர பிற இழை களினின்றும் தயாரித்த துணிவகைகள் அதன் பட்டு போன்ற தன்மை காரணமாகப் பட்டு என்று குறிக்கப்பட்டதையும் இலக்கியம் காட்டும், சான்றாக, நார்ப்பட்டு, உரோமப்பட்டு போன்றவற்றைக் கூறலாம். நார்ப்பட்டு பற்றி பெகிழ் புளூஸிலேயே காணும் நாம், உரோமப்பட்டு (2667) பற்றிய எண்ணத்தைச் சிந்தாமணிக் காலத்தில்தான் காண்கின்றோம் ஆயின் பட்டினின்றும் இவை வேறுபட்டமையைச் சுட்ட அடை சேர்த்து வழங்கும் வழக்கினைத் தமிழர் கொண்டிருந்தனர். இன்று இப்பட்டில் அதிக வளர்ச்சி நிலைகளைக் காண்கின்றோம். 31. கல்வெட்டுகளால் அறியப்படும் சோழர் காலத்தியசமுதாய, அமைப்பு.க. அ. இருநாவுக்கரசு, கல்வெட்டுக் கருத்தரங்கு, பதிப்பாசிரியர் ஆர். நாகசாமி, பக்கம் -229.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/60&oldid=1498625" இலிருந்து மீள்விக்கப்பட்டது