பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 13. பூங்கரை நீலம் தமிழர் ஆடைகள் சங்க இலக்கியம் குறிப்பிடும் இவ்வுடை பற்றிப் பிற்கால இலக்கியங்கள் ஏதும் பகரவில்லை. ஆயின் பெருங்கதையில் 'தீலம்'` என்றதொரு ஆடைப்பெயரினைக் காண்கில்நோம். (1:42:208)! இதனை நோக்க, அரத்தம் கரியல் போன்று, நீலநிற ஆடை முதலில் பூங்கரைநீயமெனப்பட்டு, பின்னர் நீலமென நின்றிருக்கக் கூடும். அல்லது நீல ஆடை நீலமெனவும், கரைமட்டும் நிலமாக அமைவது பூங்கரை நீலமெனவும் வழங்கப்பட்டிருக் கலாம். சங்கப் பாக்களில் ரிடங்களில் இவ்வுடை பற்றிய எண்ணம் அமைகின்றது. "வாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைடு" (மூ.கலி.11) 'யானு மென் சாந்துளரி கூழை முடியா நிலந்தாழ்ந்த புங்கரை தீலம் தழீஇத் தளர்பொல்லி' (மே. கலி. 15) இரண்டு இடங்களிலும் தலைவியின் உடையாகக் காட்டப் படும் இவ்வுடை, நிலம் தாழ உடுத்தப்படும் உடை எனத் தெரிகின்றது. வேறு எண்ணங்கள் புலனாகவில்லை. 14. தூசு பிற திராவிட மொழிகளில் இல்லாது, தமிழில் மட்டும் காணக் கிடக்கும் அடைபற்றிய சொல் தூசு, சங்க காலத்தில் இத்துகபற்றிய கருத்து அருகிக் காணப்பட (பட்டினப்பாலை !48) பின்னைய காலங்களில் இதன் செல்வாக்கு மிகுகின்றது. உயர்நிலைமாத்தரால் உடுத்தப்படுதலிலும்(சீவக. 550, 1320) கம்ப. சுந்தர. 413) மன்னன் கொடையிலும் (கம்ப. 10516, 10518) அதிகமாகப் பயின்று வருவதால் தூசு மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைக் காட்டும். பயிற்சி அதிகமிருப்பினும் இது எந்த இழையால் தெய்வப்பட்ட ஆடை என்பது தெளியுறவில்லை. பொதுநிலையில் ஆடை என்ற பொருளில் பருத்தி, பட்டில் சிறந்த ஆடைகளைக் குறிக்கும் சொல்லாக இது இகழ்ந்திருக்கக் கூடும். வெண்ணிறத் தூசு சிறப்பாகக் காணப்படினும் நிறத் தூசும் இருந்தன என்பதனை ஒரு சில சான்றுகன்உணர்த்தவல்லன (கம்ப. சுந்தர,413) தூகபோன்ற பல சொற்களை வடமொழியிலும் காணக் கூடுகின்றது. அவை கம்பளி பின்னப்பட்ட கம்பளி என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/61&oldid=1498633" இலிருந்து மீள்விக்கப்பட்டது