பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 49 பொருளைக் குறிக்கின்றன. ஆயின் தமிழில் பயிலும் தூசு, பட்டாடை பருத்தியாடையே தவிரக் கம்பளி ஆடையாக இருந்தமைக்குரிய எண்ணம் ஏதும் இல்லை. இது தோலாடையும் அன்று என்பது, தூ சொடும் அணியும் முந்நூல் தோல்தரும் தோற்றம் போன்றும் (கம்ப. 674) என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. அணிந்திருந்த தரசு அழ கற்றதாய் நோல் போன்று காட்சி அளித்தது என்னும் பொருள் தூசு, தோலாடை அன்று என்பதைத் தெளிவாக்கும். இன்று தூசு ஆடையைக் குறித்தல் இல்லை. 15. புட்டகம் பரிபாடல் உரைக்கும் உடை இது. புட்டகம் பொருந்துவ புனைருவாகும் (12:17) என்ற பாட ' லடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற உடை என்னும் பொருளுடையது என்பர்.1 பிற இலக்கியங்களில் இதனைப் பற்றிய எண்ணமில்லை. எனவே வேறு விளக்கங்கள் தெளிவுற வில்லை. வடமொழியிலும் புட்டகா என்றதொரு உடைலினைக் காண்கின்றோம். இதுவும் புட்டகம் போன்று தெளிவு பெறாததே."" 16. கம்பல் தறைந்த தலையுந் தன் கம்பலும் (கலித். 65) என்னும் பாட லடியில் அமையும் சம்பல், ஆடை என்பது அகராதி தரும் விளக்கம்.“பிறகாட்டுகள் இல்லை. 32. புட்டகம்-Rathing Dress-Pre-Pallavan Tamil Index, Dr. N. Subramaniaa. 33. Phuttaka-This was some sort of cloth which I have not been able to identify. This material apparently seems to have been in a great demand as a shop at Separa exclusively dealing in this material (Phuttaka Vastravari) is mentioned. Could it be some sort of printed ealicc?--Costumes, Textilet, cosmetics & Coiffure, Dr. Motichandra, page-32. 34.கம்பல்-Garmrnt; ஆடை. --Tamil Lexicon, Vol.t, Part-I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/62&oldid=1498635" இலிருந்து மீள்விக்கப்பட்டது