பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 தமிழர் ஆடைகள் அகராதிகள் பொருளுரைத்தலைப் போன்று, உரையா சிரியர்களும் உடை என்ற பொதுப் பொருளையே உரைக் இன்றனர். எனவே இடையில் இறுக்கமாகக் கட்டப்பட்டதொரு உடை என்பது தெளிவாகின்றது. இன்று கச்சம் வைத்துக் கட்டுதல் என்பது வேட்டி உடுத்தும் முறையைச் சுட்டுதலாகும். இது தவிர, இடுப்பில் துணி கட்டிக் கொள்ளலையும் கச்சை கட்டுதல் என்பர். இறப்புச் சடங்கில் (கன்னியாகுமரி மாவட்டம் செட்டியார்] கச்சை கட்டுதல் தவி யிடம் பெறுகிறது. இது இடுப்பில் கட்டும் துணியையே குறிக் கின்றது. 20. கச்சு சங்க காலத்திலிருந்தே தமிழ் மகளிர் மார்பு ஆடை, கச்சு வம்பு, வார் என்று அழைக்கப்பட்டது. இவற்றுள் அதிக செல் காக்குப் பெறுவது கச்சு ஆகும். வரிந்து கட்டிய ஆடை, கச்சை என்று அழைக்கப்பட, மார்பிலும் வயிற்றிலும் இறுகக் கட்டப்பட்டதன் காரணமாக கச்சு என வழங்கப்பட்டிருக்கலாம். மலையான மொழியிலும் இச்சொல் வழக்குண்டு.** துணிபோன் இரண்டாலும் சுச்சுகள் செய்யப்பட்டன. பொன்னாலாகியது அருகியே காணப்பட்டது. பல வண்ணத் துகில்கல் கொண்டு இவை அமைந்தன என்பது கருங்கச்சு, விரவு வரிக்கச்சு, நீலக்கச்சு, செம்பூங்கச்சு, அம்பூங்கச்சு போன்ற எண்ணங்களால் தெளிவுபடும். கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று - அகம். 376. வார் கச்சிற் றானை வீக்கம் - சீவக. 878 போன்றன இடைக்கச்சினையும், 38. Girdle Belt- கச்சை-≈hole plece of அரைக்கச்சு -Lexicon-Vol. III., part-1, முழுப் புதுத்துணி, 39. Ta: Kaccu, a kind of Corset worn by Indian Women in ancient Times. M3; Kaccu-bedice to conline the breast. - A Dravidian Etymological Dictionary, No.921,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/65&oldid=1498640" இலிருந்து மீள்விக்கப்பட்டது