பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 தமிழர் ஆடைகள் உத்தரீயம் என்னும் சொன் கலித்தொகையுள் கட்டப்படு கின்றது.இது வடமொழிச் சொல் என்பதனை இச்சொல் பற்றிய அறிஞர் எண்ணங்கள் தெளிவாக்குகின்றன. உத்தரம்-மேற் பகுதி என்ற வடமொழிப் பொருளும், மேற்பகுதியில் அணிந் தமையின் இப்பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பதனை விளக்க வல்லது.** இச்சொல் கம்பன் காவியத்தில் மிகுதியான பயிற்சி பெறுகின்றது. திரிபு அடைந்து உத்தரியம், உத்தராசங்கம் என்றும் இவை வழங்கப்படக் காணலாம் (கந்தர. 41, பால.832). உடையும் ஓவியலும் செய்யை' என்னும் பரிபாடல் (19:97- 98) கட்டும் ஒலியலை மேலாடை என்றுரைப்பர், உரையாசிரியர் கள் தானை {மது.435) துகில் (நெடு. 181) தூசு (சீவக. 1302) போன்ற பிற உடைகளுக்கும், ஓலியல் என்று மேலாடை என்னும் பொருளை உரைப்பர். மேலும் கோயில் ஒழுகில், ஒலியன் என்ற ஆடை சிறந்ததாகச் சொல்வப்படுகிறது என்ற கருத்தையும் காண்கின்றோம்.'" பிற்கால இலக்கியங்களில் அதிகப் பயிற்சி பெறாமையான். இதனைப் பற்றிய விளக்கத்தை அறியக் கூடவில்லை. பட்டம் என்ற சொல் ஐந்திணை எழுபதில் (மகு, 41) இடம் பெறுகின்றது. கடாஅக் களிற்றில் மேல் சுட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் என (குறள். 1087) மாதர் துகிலுக்கு ஒப்புமை யான பட்ரத்தின் திரிந்த தன்மையும் அணியும் விதத்திலுள்ள ஒற்றுமையும் இச்சொல்லுக்குரிய காரணமாகலாம். யானையின் முகப் படாத்தினை நெற்றிப்பட்டம் என்று கூறும் வழக்கும் இதனோடு ஒப்பிட்டு தோக்கத்தக்கது. 44.Indian Costume Coiffare and Ornament - Sachidanand Sahay, page-15. 45. uttariya= upper or outer garment - Utariyam (KLT. 95; 13), reins of the horses. {Uttara = upper. (higher) Phalaka - "plank" uttara-p-palakai (CAM. 3:103) *The cross beat placed on the pillars of the state" --Indo-Aryan Loan words in Old Tamil - S. Vaidyannthan, page-56. 45. தமிழ் இலகியத்தில் ஆடை அணிகலன்கள் பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி நவம், 1977,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/71&oldid=1498650" இலிருந்து மீள்விக்கப்பட்டது