பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 57 அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், பதுமுகள் பரவை மார்பன் நெய்க்கிழிப்பயிலச் சேர்த்தி துதிமயிர்த் துசிற் குப்பாயம் புருகென தூக்கினானே சீவக. 678. என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போத்த நச்சினார்க்கினியர், 'மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே ைெலயனசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டை யிலே புகுக என்று கூறிப் பரினித்தான் என்க" என்று நவில் இன்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னச் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கி விடக் காண்கின்றோம் (சீவக. 678-நச்சி-உரை). இன்று சட்டை யுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். 22. உத்தரியம் மேலாடையின்றி சமப் புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினி யோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும், தமிழர் ஆடை வரலாறும் இக் கருத் நினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணித்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத் தீஸ் ‘குயவரிகள் ஒரு மேலாடை அணிந்தகொள்ளலாம்' என்ற தருதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. 553), அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் கத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், சுத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, முகாயும் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/70&oldid=1498649" இலிருந்து மீள்விக்கப்பட்டது