பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 தமிழர் ஆடைகள் இன்று போர்வையுடன் புதைப்பு என்ற சொல் வழக்கும் தென்தமிழ் நாட்டில் உள்ளது (கன்னியாகுமரி மாவட்டம்). "புதைத்தல் போர்த்தல்; மலைநாட்டு வழக்கு" என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 5:4). மலையாள நாட்டில் இன்று இவ்வழக்குண்மை, சார்பு காரணமாகத் தமிழராலும் இது பயன் படுத்தப்படுகிறது என்பதை விளக்க வல்லது. அடியார்க்கு நல்வார் தமிழ் வகையுன் உரைக்கும் செம்பொத்தி, வெம்பொத்தி, பணிப்பொத்தி என்ற ஆடைகள் பொத்திப் படுக்கும் போர்வைகள் என்பதும், வெண்மைநிறம் சென்விறம், வேலைப்பாடுகள் அமைந்தமை காரணமாக இவை பெயர் பெற்றிருக்கலாம் என்பதும் அறிஞர் ஒருவரின் எண்ணமாகக் காண்கின்றோம்." போர்த்தி என்ற சொல்லின் திரிபாகப் பொத்தி அமைந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் இவ் அறிஞர் கருத்தை உறுதிப்படுத்துவதாகும். இச்சொற்களைத் தவிர, நீலகேசியில் அமையும் 'பெரிய பிரச்சையினாய்' (497) என்பதில் உள்ள பிரச்சை என்ற சொல்லுக்கு உரையாசிரியர் போர்வை என விளக்கம் அளிப்பார். ஆனால் பிற விளக்கங்கள் இதனைப்பற்றியின்மையால். தெளிவாக இச்சொல் பற்றி அறியக் கூடவில்லை. 24. கவசம் காப்புக்காக அணியும் உடை கவசம். காலப்போக்கில் பலசொற்கள் கவசம் குறித்து முகிழ்த்தபோதும் தன் செல்வாக் கிளீன்றும் பெயர்ச்சியுறாத்து இச் சொல், சங்கப் பாவில், புலி நிறக் கவசம், கச்சம், மெய்புதை அரணம் என்ற சொற்களும் சிந்தாமணியில் புலிதிறப் போர்வை, கருவி, கவசம், -ஜசு, பூண், சாலிகை என்ற பெயர்களும், கம்பனில், சுவசம், சாலிகையுடன் கோதை, புட்டில் என்பனவும் இதனைக் குறித்தமைகின்றன. உரையாசிரியர் உரை சத்தாகம் என்னுமொரு சொல்லினையும் தலிலும் (சீவக. 2236), புலித்றக் கவசததிற்குப் புலியின் தோலாவாகிய கவசம் என்ற பொருளைக் காண்கின்றபொழுது (புறம். 13) முதலில் தோல் 48. தமிழ் இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச்செல்வி, அக்டோபர் 1977.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/75&oldid=1498659" இலிருந்து மீள்விக்கப்பட்டது